கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
நான் கடவுள் இருக்கிறார் என்றால் ஆத்திகன், இல்லை என்றால் நாத்திகன். அவ்வளவே இன்றைய மக்களின் தோன்றல். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற எந்த ஒரு அறிவியல் பூர்வமான சான்றும் இல்லை. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் முடியாது ஏனென்றால் எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆராச்சியும் அதன் தோராயமான முடிவுகளை ஊகித்துக்கொண்டுதான் தொடங்கப்படுகிறது. நான் கடவுளை நிரூபிக்க வேண்டும் என என் ஆராச்சியை தொடங்கினாள், என்னால் நிரூபிக்க முடியும். அதுவே என்னால் கடவுள் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்றால் அதுவும் முடியும்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு வருவதற்கு முன், கடவுள் வேண்டுமா வேண்டாமா என சிந்திப்போம்.
தேங்கி கிடக்கும் நீரில் ஒரு புழு உருவாக எந்த கடவுளும் தேவை இல்லை. அந்த புழுவின் பரிணாம வளர்ச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. பலகோடி கோள்கள் கொண்ட இந்த அண்டத்தில், பூமியை மட்டுமே கடவுள் சுற்றிவருக்கிறார் என்றால், இது ஏற்றுக்கொள்ள முடியாது. எனது இன்பமும், துன்பமும், தேவைகளும் என்னால் மட்டுமே முடியும் என்றால் எனக்கு கடவுள் தேவை இல்லை. ஒரு கடவுளின் தேவை எப்போது வருகிறது? நான் துன்பப்படும் பொழுது என்னை தேற்றுவதற்கு, குழம்பி இருக்கும் போது வழிநடத்த, என் துன்பத்திற்கு காரணம் காட்டிக்கொடுக்க மற்றும் எனது தலைகணத்தை தகர்த்தெரிய... இன்னும் பல. ஆனால் இவை எல்லாம் என்னை சுற்றியுள்ள சாதாரண மனிதர்களாலேயே முடியும். நான் அவர்களையே கடவுளாக காண்கிறேன். நம் துன்பத்திற்கு உதவுவரை கடவுளாக பார்த்தால் நீ நாத்திகன், அவரை கடவுள்தான் அனுப்பினார் என்றால் நீ ஆத்திகன், அவ்வளவே!
No comments:
Post a Comment