நான் சமீபத்தில் மிக ஆர்வமாக ஆரம்பித்த ஒரு முயற்சி, முயற்சி என்றே சொல்லலாம், ஆராய்ச்சி என்று சொல்ல முடியாது, அது ஆவிகளுடன் எப்படி பேசுகிறார்கள் என்பதை உணரும் முயற்சி. முதலில் நான் யோசித்தது நான் ஏன் ஆவிகளுடன் பேசவேண்டும் என்பதுதான். எனக்குள் எழுந்த சில கேள்விகள் ஆவிகளை நோக்கி என்னை பயணிக்க துண்டியது. கடவுளை பற்றி அறிய எண்ணிய நான் ஆவிகளை பற்றி தெரிந்துகொள்ள முடிவேடித்தேன். ஆவிகளை பற்றி அறிவியல் பூர்வமான சில உண்மைகள் தெரிந்தால் அதனை அடிப்படையாக கொண்டு அறியமுடியும் என்ற அந்த யோசனைதான் அது.
எனக்கு அடிப்படையாகவே கடயுளை பற்றி நம்பிக்கை இல்லை, நம்பிக்கை இல்லை என்பதை விட கடவுள் தேவை இல்லை என்பவன் நான். அறிவியலால் நிரூபிக்கப்பட்ட Chaos தியரியையும், பிக் பாங் தியரியையும் முழுமையாக நம்புபவன் நான். அதனால் இந்த உலகம் உருவாகவும், மனிதன் உண்டானதற்கும், மனிதனின் அன்றாட செயல்களுக்கும்கூட கடவுள் தேவை இல்லை என்பதே என் நம்பிக்கை. என் வாழ்வில் நான் பார்த்த பல விசயங்கள் அதையே எனக்கு உணர்த்தின. என் குடும்பத்தில் எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு, எனக்கும் இருந்தது என் பகுத்தறிவு வளரும் வரை. என் பகுத்தறிவு வளர வளர எனக்குள் ஆயிரம் கேள்விகளும் வளர்ந்தது. அயன்ஸ்டீன் கூறியது போல பகுத்தறியு என்னும் வட்டம் பெரிதாக பெரிதாக அதன் மீதுள்ள கேள்விகளும் கூடிகொண்டே போகும் அதன் விட்டதைப் போல், அது நிதற்சனமான உண்மை.
அதனால் நான் ஆவிகளை பற்றி அறிவியல் பூர்வமாக தெரிந்துகொள்ள முயன்றேன். முதல் கட்டமா சில புத்தகங்களை படிக்கதொடங்கினேன். தமிழகத்தில் ஆவிகளுடன் பேசும் நிறைய நபர்கள் இருகின்றார்கள் என்பது தெரிய வந்தது. அவர்களைப்பற்றியும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றியும் சில தகவல்களை சேகரித்தேன். அவற்றுள் சில புத்தகங்களை வங்கியும் படித்தேன். தமிழ் நாட்டில், மதுரை அருகே உள்ளே விக்கரவாண்டி எனும் ஊரை சேர்ந்தே திரு ரவிசந்திரன் என்பவரே ஆதாரபூர்வமாக ஆவிகளுடன் பேச ஆரம்பித்துள்ளார். இப்பொழுது அவரது சீடர்கள் நிறைய பேர் ஆவிகளுடன் பேச ஆரம்பித்து உள்ளனர். இவர்கள் ஒன்று சேர்ந்து ஆவி ஆராய்ச்சி கலக்கம் ஒன்றை ஆரம்பித்து, தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் தொடக்கியுள்ளனர்.
நான் அவர்களின் புத்தகத்தை படித்தபோது, அது என் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மேலும் கேள்விகளை துண்டின. நான் படித்த சில உறுத்தலான விசயங்கள் என்னை அத்தோடு நிறுத்திக்கொள்ள தோன்றியது. உதரணத்துக்கு நான் ஒரு ஆவியுடன் பேசவேண்டும் என்று அவர்களிடம் போகிறேன் என்று வைத்துகொள்ளுங்கள், அவர்கள் முதலில் கூறுவது அந்த ஆவி நல்ல ஆவியாக இருக்கவேண்டும் என்று. அந்த ஆவி கேட்ட ஆவி என்று அவர்கள் சொன்னால் அதை நம்பிக்கொண்டு திரும்பிவிட வேண்டும். அடுத்து எல்லா ஆவிகலும் நம்முடன் பேசவேண்டும் என்று எண்ணாது, நீங்கள் ஆவி உங்களுடன் பேச விரும்பவில்லைனும் அவர்கள் சொல்லலாம். அடுத்து மிக முக்கியமானது , நீங்கள் மிக தூய்மையாக இருக்கணும், அப்பொழுதுதான் ஆவி உங்களுடன் பேசவிரும்புமாம். இந்த தூய்மையின் அளவுகோல் குறிப்பிடாதது அவர்களின் மேல் மேலும் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. இவை எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் சொல்லும் இன்னொன்று சில ஆவிகள் வேண்டுமென்றே தவறான தகவல்களை சொல்லும் என்று.
உதாரணத்திற்கு நான் ஆவிகளுடன் பேசுவேன் என்று சொல்வதை நம்பி நீங்கள் என்னிடம் வருகிறீர்கள். நான் உங்களிடம் எதையும் சொல்ல விரும்பவில்லைஎன்றால் அந்த ஆவி கேட்ட ஆவிஎன்றும் அல்லது அது உங்களிடம் பேசவிரும்பவில்லை என்றும் அல்லது நீங்கள் துய்மையானவர் இல்லை என்றும் சொல்லலாம். ஒருவேளை நான் எதாவது சொல்லி அது உண்மை இல்லை என்றால், அந்த ஆவி வேண்டுமென்றே பொய் சொல்லுகிறது என்று சொல்ல முடியும்.
சரி, இவர்கள் எப்படி ஆவியுடன் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்? அதற்கும் சில செய்முறைகளை சொல்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது ouija board என்பது. இதை பற்றி நீங்கள் வலைதளத்தில் தேடினால் அதிர்ச்சியாக இருக்கும். என்னென்றால் இந்த ouija board என்பது குழந்தைகள் விளையாட சீனர்கள் பயன்படுத்திய ஒரு பொம்மை. அதை பற்றி தெரிந்து கொள்ளாதது நம் பலவீனம். இந்த போர்டின்மீது ஓடு டம்ளரை கவிழ்த்து வைத்து அதன் மேல் ஒருவர் தன விரலை வைத்து அந்த ஆவியை நினைத்து பிராத்தனை செய்ய வேண்டும். அப்பொழுது அந்த ஆவி, டம்ளர் மீது விரல் வைத்திருக்கும் நபரை ஊடகமாக கொண்டு அந்த டம்ளரை போர்டின் மீது நகர்த்தும். அப்படி நகர்த்தும் போது டம்ளர் செல்லும் ஒவ்வொரு எழுத்துகளையும் குறித்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்று சேர்த்தால் ஆவி சொன்னது புரியும். இப்போது எனது கேள்வி அந்த ஆவிக்கு எழுத படிக்க தெரியாதிருந்தால்?
இது போல் பல கேள்விகள் எண்ணுள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்தேடவே என் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் என நினைக்கின்றேன். இந்த கேள்விகளுக்கேல்லாம் எப்பொழுது விடை கிடைக்கும்?
"முன்ன பின்ன செத்தாதான் சுடுகாட்டுக்கு வழி தெரியும்"
"முன்ன பின்ன செத்தாதான் சுடுகாட்டுக்கு வழி தெரியும்"
Brother I tried ouija board... It's real...
ReplyDeleteActually untill i try ouija board, i dont have faith in god and spirits... after hat i believed...
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDelete